Thursday, March 20, 2008
Friday, March 7, 2008
வெயிலோடு விளையாடு...

சூரியனே!
ஆதி பகவன் நீ
சோதி பகவன் நீ
சோதிக்காதே பகலவன் நீ
அன்று அநுமன்
உன் அக்கம் பக்கம் வர கொதித்தெழுந்தாய்,
தண்டித்தாய்;
இன்று நாங்கள்
எங்கள் அக்கம் பக்கம் கூட போக விடாமல்
தண்டிக்கிறாய்.
வாழ்க உன் சமநீதி; மனுநீதி
உச்சி வெயில் என்றால்
குச்சி வீடோ
மச்சி வீடோ
வீடே ஜெயில்
நீ இல்லையேல் மண்ணில் உயிர் இல்லை
நீ இருந்தாலோ மண்ணில் வெயில் தொல்லை
உன் தாக்கத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் பிழைக்குமா?
உச்சி வெயில் வந்துவிட்டால் நாட்டில் எங்கு மழை
குச்சி ஐஸ்காரன் காட்டில் தான் மழை
உச்சி வெயில் வந்துவிட்டால் நாட்டில் உனக்கு எங்கும் அழை(ப்பு)
மக்கள் மற்றும் மாக்கள் படைப்பிற்கு நீயும் ஒரு காரணமாம்.
தோன்றல் முதல் எங்களை மேலிருந்து உற்று நோக்கும் உனக்கு இன்னுமா மனித மனம் புரியவில்லை
கொடுக்க கொடுக்க புகழ் பாடும் போற்றும்
(அறியாமல்) துடிக்க வைத்தால் சாடும் தூற்றும்.
துன்பத்தின் வெறுமை தான் இன்பத்திற்கு பெருமை சேர்க்கிறது....
உன் தத்துவமும் இது தானே !!
நீரின் பெருமையை மண்டையில் ஆணி அடித்தாற் போல் சுளீர் என்று அடித்து சொல்லிவிட்டாய்.
நீ ROBIN HOOD ஆக மாறும் காலம் எப்போது ?
இருக்கும் இடத்தில் எடுத்து, இல்லாத இடத்தில் கொடுத்து ..
நீர் நிலைகளை வெற்று பூமிகளாக மாற்றும் நீ, மழை தருவது எப்போது
உன்னை நேராக காணுதல் இயலாது - இருந்தாலும் நம் நேர்காணல் தொடரும்.
Subscribe to:
Posts (Atom)